Wednesday, February 18, 2015

இயற்கை

சூரியன் உதிக்கும்போது
சத்தமிடுவதில்லை..

மலர்கள் மலரும்போது
விளம்பரம் செய்வதில்லை..

மழை என்றும் அனுமதிபெற்று
வருவதில்லை

தென்றல் திசை பார்த்து
வீசுவதில்லை

இயற்கை தனது கடமையை
இயல்பாய் செய்கிறது

இயல்பாய் இருப்பதும்,
உண்மையாய் இருப்பதும்
இயற்கையின் நெருக்கம் - அதுவே
இறைவனின் விருப்பம் !

Sunday, October 26, 2014

சுவர்கள்

di="on">


சுவர்கள்


---------------



துயருறும் இழப்புகள்..



சுற்றத்தார் எல்லோருக்கும்

சொல்லி அனுப்ப

முடிவதில்லை !



சுவர்களே

தூதுவர்களாக மாறுகின்றன !



நகரத்து வீதிகளின் சுவர்கள்

கோடைக் காலங்களிலும்கூட

நனைகின்றன...

" கண்ணீர் அஞ்சலி" சுவரொட்டிகளைத்

தாங்கியபடி !



- எஸ். எஸ். ஜெயமோகன்

Friday, May 10, 2013

வலி




விரும்பியவர்களை

நெருங்கும்போது

விலகிச் செல்கிறார்கள்..

அந்த வலியை, இப்போது

உணர முடிகிறது !



சில நேரங்களில்,

நாமும் விலகி நின்றோம்தானே !

நம்மை நேசிபவர்கள்

நம்மை நெருங்கும்போது !

Saturday, April 20, 2013

கொஞ்சம்....



கொஞ்சமாகவே படித்தேன்
குறைவான மதிப்பெண்
பெற்றேன் !

கொஞ்சமாகவே உழைத்தேன்
குறைவான ஊதியம்
பெற்றேன் !

கொஞ்சமாக ஜெபித்தேன்
கொஞ்சமாகவே ஜெயித்தேன் !

கொஞ்சம் என்பது ஒரு
பெருங்குறை....


முழு இதயத்தோடு
முழு ஆற்றலோடு
முழு நம்பிக்கையோடு
முழுவதுமாக
செயலில் கரைந்து,
காணமல் போவதில்தான்
முழு வெற்றி உள்ளது என்பதை
இப்போது முழுமையாக
உணர்கிறேன் !

Saturday, January 12, 2013

ஆனந்தம்


அன்பான கைக்குலுக்கல்
இன்று
அழுத்தமானது !

அளவோடு சிரிக்கும் புன்சிரிப்பு
இன்று
அழகானது !

வாய் பேசாதவர்கள்கூட
இன்று
வாழ்த்துகிறார்கள் !

புத்தாண்டு - பொங்கலுக்கு
நன்றிகள் !

Saturday, July 28, 2012

இன்பம்



 இன்பம்
 -----------

மலரின் மென்மை..

வசீகரிக்கும் வாசம்..

வீசும் தென்றல்..

கனிகளின் சுவை..

வண்ணத்துப்
பூச்சிகளின் வண்ணம்..


இதம் தரும்
இளம்காலை சூரியன்..

முழு நிலவு..


நம்மைச் சுற்றி   
இயங்கும் இயற்கை

இதமானது
இன்பமானது !


இயற்கையை
நேசிப்போம் !

இயற்கையாய்
வாழ்வோம் !

இயற்கையும்,
இறைவனும் ஒன்று,
இயற்கையோடு இணைந்திருப்பது
இறைவனோடு இணைவதற்கு
இணையானது !

Thursday, June 28, 2012

மா. பொ. சி




தமிழர்களின் அடையாளம் வீரம்.
வீரத்தின் அடையாளம் மீசை.

 மா. பொ. சி என்றதும்
நினைவுக்கு வருவது
அவரது பெரிய மீசை !

தமிழ்மீதும், தமிழ் மண்ணின்மீதும்
அவருக்கு இருந்தது
தீராத ஆசை !

 நாட்டு விடுதலைக்காகப்
போராடி சிறை சென்றவர்,
சித்தரவதைகளை
அனுபவித்தவர்.

அங்கே, தமிழ் இலக்கியங்களையும் காவியங்களைக் கற்றார். '

சிலப்பதிகாரம்' அவருக்குச்
சிநேகதியானாள்,

' சிலம்புச் செல்வர்' என்று
தமிழ் மக்களால் அன்பாக
அழைக்கப் பெற்றார் !