.
' பசங்க ' படத்தில் வரும் முக்கியமான ஒரு வசனம் இது
பாராட்டுக்களும், விருதுகளும், அங்கீகாரமும் அவசியமானது.
(24.03.2012) அன்று சனிக்கிழமை சென்னை - தேவநேய பாவாணர் அரங்கில் எனக்கு
" பயன் எழுத்துப் படைப்பாளர் " எனும்
விருது, இதழ்கள்-பதிப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.
திரு ரமேஷ் பிரபா ( சன் T.V குழுமத்தின் தலைவர் ) அவர்கள் விருதுகளை வழங்கி, பாராட்டுரை வழங்கினார். இது
துறை சார்ந்த படைப்பாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.
கணினி , ஏற்றுமதி வர்த்தகம், தொழில் வளர்ச்சி, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்து, எழுதி வரும் படைப்பாளர்களுக்கான விருது அது. என்னோடு 20 பேர் விருது பெற்றார்கள்.
ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக அவ்வப்போது
" வளர் தொழில் " மாத இதழில் எழுதியதற்காக
எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது.
ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் என்னை பரிந்துரை செய்தார். தொலை பேசியில் அழைத்து பேசினார். நான் நன்றி சொன்னேன்.
கதை , கவிதைகள் எழுதுவதற்கு நிறைய பேர்கள்
இருக்கிறார்கள்.
தொழில் - வணிகம் குறித்தும், நிதி மேலாண்மை, விற்பனை போன்றவற்றை எழுதுவோர் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். நான் எனது துறையில் தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.
எத்தனையோ முறை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அனால், அன்றுதான் முதன்முறையாக மேடைக்கு வந்து, விருது வாங்கி இருக்கிறேன்.
என் மனைவி, மகன்கள், நண்பர்கள் உடன் இருந்தார்கள். கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.
அந்த சனிக்கிழமை, ஒரு சந்தோஷ சாயங்காலம்.
++
" ஒவ்வொரு மனசும், ஒரு சிறிய பாராட்டுக்குதானே ஏங்குது ! "

No comments:
Post a Comment